Free Biryani : வேட்டி கட்டி வந்தால் பிரியாணி இலவசம்... உடனே கிளம்புங்க

சென்னை தொப்பி வாப்பா என்ற பிரியாணிக்கடையில் வேட்டிக்கட்டி வந்தால் பிரியாணி இலவசம் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது.


கடந்த 2015ம் ஆண்டு கோ ஆப் டெக்ஸ் நிறுவன செயல் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாம் ஜனவரி 6ம் தேதி இளைஞர்கள் வேட்டி தினமாகக் கொண்டாடவேண்டும். கைத்தறி மற்றும் நெசவு தொழிலைக் காப்பாற்று விதமாக இது பெரிய விழிப்புணர்வை ஏற்படும். எனக் கூறியிருந்தார்.


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த வேட்டி தினத்தை வைத்து சென்னையில் உள்ள ஒரு பிரியாணிக்கடை ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது