84 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா & வாய்ஸ் வழங்கும் இந்த BSNL பிளான் பற்றி தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற பெரு நிறுவனங்களுடன் போட்டியிடும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் நன்மைகளை வழங்கும் திட்டமொன்று இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?


அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி ஸ்பெக்ட்ரம் எனும் வியாபார வளர்ச்சிக்கான பேருந்தைத் தவறவிட்டிருக்கலாம், ஆனால் தனது நெட்வொர்க்கில் அதிக சந்தாதாரர்களை சேர்ப்பதற்கு ஒருபோதும் தவறவில்லை. ஏனெனில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா போன்ற பெருநிறுவனங்களையும், நிதி நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிஎஸ்என்எல் உள்ளது. அதை சரியாக செய்து வருகிறது என்றே கூறலாம்.


 

அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ்!

சமீபத்தில் பிஎஸ்என்எல் அதன் சில ரீசார்ஜ் திட்டங்களில் திருத்தங்களையும் உடன் பல புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது. அத்தகைய திட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் திட்டமானது பெரும்பாலான பயனர்களின் கவனத்தை ஈர்த்தது; அதென்ன திட்டம்? அதன் முழு நன்மைகள் என்ன? செல்லுபடியாகும் காலம் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில் இதோ!

மொத்தம் 84 நாட்கள் என்கிற செல்லுபடி!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,098 ஆகும். இந்த பிஎஸ்என்எல் ரூ.1098 திட்டமானது மொத்தம் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை எந்த விதமான வரம்பும் இல்லாத அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.