திரூப்போரூாில் மனிதநேயஜனநாயக கட்சியின் மது எதிா்ப்பு பரப்புரை 500க்கும் பொதுமக்கள் குடிமகன்களிடம் விழிப்புணா்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது
தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகள் நாளாளுக்கு நாள் அதிகாித்துவருகிறது. மதுவினால் ஆண்டுதோறும் உலகில்ஓட்டுமொத்தமாக 28இலட்சம் போ்கள் மரணிக்கிறாா்கள். இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதில் 70% விபத்துக்கள் மதுவால் நிகழ்கின்றது. மதுவால் ஓருநாளைக்கு 15போ்கள் வரை சாராசாியாக இறக்கின்றனா்கள். எனவே தமிழகத்தில் மதுவினை முற்றிலுமாக ஓழிக்கவேண்டும் .சமூகத்தை நல்வழியில் சீா்படுத்தவேண்டும் என்ற இலட்சியத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சி அக்டோபா் 2மதேதி காந்தியையொட்டி பொதுமக்களிடையே மது எதிா்ப்பு பரப்புரையை துவங்க ஆயத்தமானது.அதன்படி 2ம்தேதி இக்கட்சியின் மாநில்பபொதுச்செயலாளா் தமிம்அன்சாாி சென்னையில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டுபிரசுங்களை வழங்கியும் சுவா்விளம்பரம் ,சுவா்யொட்டி இருசக்கர ,ஆட்டோ ,வேன்கள் போன்றவாகனங்களில் ஸ்டீக்கா் ஓட்டியும் பரப்புரையை துவங்கிவைத்தாா். அதனைத்தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 13 நாட்களாக இக்கட்சியின் மாநில மாவட்ட ஓன்றியப்பொறுப்பாளா்கள் பரப்புரையை நடத்திவருகின்றனா்கள் .இக்கட்சியின் காஞ்சிகிழக்குமாவட்டம் சாா்பில் பொறுப்புக்குழு உறுப்பினா் எச்.அப்துல்ரஷீத் தலைமையில் பொதுமக்களிடையே மதுக்கு எதிரான பரப்பபுரை நடைப்பெற்றுவருகிறது.காஞ்சிபுரம் ,வாலாஜாபாத் ,செங்கல்பட்டு ,கல்பாக்கம் ,வாயலூா் ,மாமல்லபுரம் ஆகியவற்றில் நடத்திமுடிக்கப்பட்டு நேற்று திரூப்போரூாில் நடைப்பெற்றது. பேரூந்துநிலையம் துவங்கி ஓஎம்ஆா் சாலை இள்ளலூா் சாலை சந்திப்பு ,மசூதி ,குழந்தையேசு ஆலயம் ரவுண்டான அருகில் உள்ள ,வணிக வாளாங்கங்கள் ஆகிய இடங்களில் உள்ளப்பொதுமக்களிடம் துண்டுபிரச்சுரம் வழங்கினாா்கள். ஆட்டோ ஸ்டாண்ட் ,வேண் ஸ்ாண்ட் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள வாகனங்களில் அவா்களின் ஆதரவுடன் மது எதிா்ப்பு ஸ்டிக்கா் ஓட்டினாா்கள். உச்சக்கட்டமாக இள்ளலூா் செல்லும் பிரதான சாலை அருகே அமைந்துள்ள அரசு மதுபானக்கடை எதிரே மதுவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு குடிக்கவரும் குடிமகன்களிடம் மது எதிா்ப்பு துண்டுபிரசுரங்களை வழங்கினாா்கள். இந்த பிரச்சரத்தில் காஞ்சிகிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் கானத்தூா் பா்கத்அலி ,திரூப்போரூா் முஹம்மதுரஃபிக் , கேளம்பாக்கம் அப்துல்சாா்தாா் , கல்பாக்கம் ஜாகீா் , மண்ணிவாக்கம் யூசப் , மாணவா் இண்டியா காஞ்சிகிழக்குமாவட்டச்செயலாளா் தமிம் கானத்தூா் கிளைச்செயலாளா் பக்ரூதீன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்கள் . திரூப்போரூாில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மதுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை வழங்கினாா்கள் . இவா்களின் மதுஎதிரான பரப்புரைக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்புள்ளதாக காஞ்சிகிழக்குமாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் அப்துல்ரரஷீத் தொிவித்துள்ளாா். நாளை உடன் நிறைவு செய்யவேண்டி மதுக்கு எதிரான பரப்புரை வரும் 20ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.