கம்பம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி கிருஷ்ணசாமி வாத்தியார் தெருவைச் சேர்ந்த ராசு என்பவரது மகள் ஜெயசாந்தி ( 40) இவருக்கும் பூசாரி கவுண்டன் பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் (48) என்பவருக்கும் திருமணமாகி 19வருடங்கள் ஆகின்றன இவர்களுக்கு சந்துரு (18) விக்னேஷ் (16 ) என்ற 2 குழந்தைகள் உள்ளனர் மேலும் இருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயசாந்தி வீட்டை விட்டுச் சென்றுள்ளார் மேலும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் எனவே தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ,உத்தரவின் பெயரில் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் சின்ன கண்ணு, தலைமையில் ராயப்பன்பட்டி காவல் ஆய்வாளர் சிலை மணி, அறிவுறுத்தலின் பேரில் சார்பு ஆய்வாளர் மாயன் ,மற்றும் போலீசார் ஒத்துழைப்பில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் இந்நிலையில் ஜெயசாந்தி திருப்பூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது மேலும் போலீசார் பாதுகாப்பில் வரவழைத்து குடும்பத்தாருடன் நேற்று ஒப்படைத்தனர்.